Skip to Content

சிவனருள் பெற்ற அடியார்கள்

சிவனருள் பெற்ற அடியார்கள் - கே.சுந்தரராமன்
சிவனருளால் உயிர்கள், பல பிறவி எடுத்து பக்குவம் அடைந்து, மெய்ஞானத்தை உணர்ந்து வீடுபேற்றை அடைகின்றன. இறைவன் மீது மாறாத அன்பு செலுத்தி, பக்தியுடன் அவனை வணங்கி, முக்தி பெற வேண்டும். அவ்வாறு இறைவனை வழிபட்டு, அவனது திருவருள் பெற்ற சிவனடியார்களின் வாழ்க்கை வரலாறு, நமக்கு வழிகாட்டியாக உள்ளது. திருத்தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்றை, சேக்கிழார் பெருமான் ‘திருத்தொண்டர் புராணம்’ என்ற தலைப்பில் தொகுத்தளித்துள்ளார். திருத்தொண்டத் தொகை என்ற நூலை எழுதிய சுந்தரமூர்த்தி நாயனார், சிவபெருமானின் தோழராகவே அறியப்படுகிறார். ஒருசமயம் திருவாரூர் கோயிலில் சிவபெருமானுடன் சுந்தரமூர்த்தி சுவாமிகள் உரையாடிக் கொண்டிருந்தபோது, தேவாசிரியன் மண்டபத்தில் சிவனடியார்கள் பலர் வருகை புரிந்தனர். அவர்கள் குறித்து சுந்தரர், ஈசனிடம் வினவ, சிவபெருமானும் அவர்களது பெருமைகளை எடுத்துரைக்கிறார்.
₹ 200.00 ₹ 200.00

Not Available For Sale

This combination does not exist.