Skip to Content

சிலங்கிரி

சிலங்கிரி கதைகள் - மனோ சின்னத்துரை
நூல் குறிப்பு:

அவசரமவசரமாக ஓடி வந்து ஒரு சில ஆண்டுகளுக்குள் மீண்டும் நாடு திரும்பிவிடுவோம் என்று புலம்பெயர் மண்ணில் கால்பதித்த நாங்கள் இன்று மெதுமெதுவாய் வேர்விட்டு இந்த மண்ணிலேயே கரைந்து கொண்டுமிருக்கிறோம்.
புதிய வாழ்க்கை, புதிய அனுபவங்கள், தடுக்கி விழுகிறோம். மீண்டும் எழுகிறோம். புதிதுபுதிதாய் கற்றுக் கொள்கிறோம். சொல்வதற்கு ஏராளமான கதைகள் எம் முன் குவிந்து கிடக்கின்றன. ஊரை இழந்து உறவுகளை இழந்து, ஆரம்பத்தில் அழுது வடித்த நாங்கள், இன்று புலம்பெயர் வாழ்வையும் சுவைத்துக் கொள்கிறோம் என்பதையும் மறுப்பதற்கில்லை. நாங்கள் பட்ட துயரை அடுத்த தலைமுறையிடம் நாங்கள் கையளிக்கவேயில்லை. எங்கள் வலிகளை எங்களுக்குள்ளேயே புதைத்துக் கொண்டோம். இந்த நாடுகளிடமும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதையும் நன்றியறிதலுடன் பதிவு செய்கிறோம்.
ஆசிரியர் குறிப்பு:
மனோகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தன் தந்தையின் பெயரை இணைத்து மனோ சின்னதுரை என்ற பெயரில் சிறுகதைகளை எழுதி வருகிறார். 1961 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரில் படித்தவர். புலம் பெயர் சூழலில் இருந்து வெளிவந்த ஓசை, அம்மா ஆகிய இதழ்களின் ஆசிரியர். நாடக செயல்பாட்டில் ஆர்வம் கொண்ட இவர் பாரிஸ் நகரில் அச்சக மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். மூன்று மகள்கள் மட்டும் இணையருடன் பிரான்சில் வசித்து வருகிறார்.
₹ 120.00 ₹ 120.00

Not Available For Sale

This combination does not exist.