சீனா : விலகும் திரை
சீனா : விலகும் திரை - பல்லவி அய்யர் - தமிழில்: ராமன் ராஜா நீங்கள் இந்தியாவில் வசிக்க விரும்புகிறீர்களா அல்லது சீனாவிலா? ஏழையாக இருந்தால் சீனாவில் வசிக்கவே விரும்புவேன்.கொஞ்சம் வசதி வாய்ப்புகள் இருந்தால், இந்தியாதான். கட்டுப்பாடு, குழப்பம், புதுமை, பழமை, வறுமை, செல்வம், நல்லது, கெட்டது. கலந்து புகையும் வெடி மருந்து சீனா. இந்தியாவிடம் இருந்து சீனாவும், சீனாவிடம் இருந்து இந்தியாவும் கற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. ஒன்றின் பலம், மற்றொன்றின் பலவீனம். இங்கே ஜனநாயகம் உண்டு. ஆனால், மோசமான ஆட்சிமுறை. சீனாவில் ஜனநாயகத்தைப் பலியிட்ட பிறகுதான் முன்னேற்றங்கள் சாத்தியமாகியிருக்கின்றன. எனில் எது சரியானது? வளர்ச்சி குறைபாட்டுடன் கூடிய ஜனநாயகமா அல்லது ஜனநாயகம் இல்லாத வளர்ச்சியா? தி ஹிந்து பத்திரிக்கையின் பெய்ஜிங் நிருபராகப் பணியாற்றிய பல்லவி அய்யர், சீனாவின் இதயத்துடிப்பை ஐந்தாண்டு காலம் அருகில் இருந்து கவனித்து நேரடி அனுபவங்களின் மூலம் இந்நூலை உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு பயண நூலாக மட்டும் இல்லாமல், சமகால சீனாவின் சரித்திரம், அரசியல், கலாச்சாரம், சாதனைகள், சவால்கள், சர்ச்சைகள் என்று பலவற்றை படம்பிடிக்கும் இந்நூல், சீனாவையும் இந்தியாவையும் பல விஷயங்களில் ஒப்பிட்டு புதிய வெளிச்சங்களை அளிக்கிறது. |