Skip to Content

சீனா : ஒரு முடிவுறாத போர்

சீனா ஒரு முடிவுறாத போர் (சீனக் கலாச்சாரப் புரட்சிப் பற்றிய பதிவுகள்) - வில்லியம் ஹிண்டன்
சிகாகோவில் பிறந்த வில்லியம் ஹின்டன், ஆங்கில நாளிதழில் நிருபராகப் பணியாற்றியவர். அவர் சீனாவில் தங்கி இருந்தபோது நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. புரட்சிக்குப் பின் சீனாவில் தனியுடைமை ஒழிக்கப்பட்டது. மக்களால் மக்களுக்கான ஆட்சி நடத்தப்பட்டது. எனினும் காலப்போக்கில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் அதிகார வர்க்கமாக உருமாறினர்கள். கம்யூனிசத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு ஒவ்வாத பல நிகழ்வுகள் நடைபெற்றன. மோசமான இந்தப் போக்கை ஒழித்துக்கட்ட அன்றைய சீனத் தலைவர் மாசேதுங் தலைமையில் நிகழ்ந்ததுதான் சீனாவின் கலாசாரப் புரட்சி. கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை ஒழிப்பது, மூளை உழைப்பு, உடல் உழைப்புப் பிரிவினைகளை ஒழிப்பது, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அதிகார வர்க்கத்தினரைப் போல நடந்து கொண்டால் அவர்களைத் தண்டிப்பது உட்பட பல போராட்ட நிகழ்வுகள், அவற்றின் அனுபவங்கள் இந்நூலில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலாசாரப் புரட்சி குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் பிற்காலத்தில் நிறையக் கூறப்பட்டாலும், புரட்சிக்குப் பின் சமூகத்தில் நடக்கும் மாற்றங்களைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த இந்நூல் உதவும்.
₹ 150.00 ₹ 150.00

Not Available For Sale

This combination does not exist.