Skip to Content

சீக்கியர்கள்

சீக்கியர்கள்: மதம் அரசியல் வரலாறு - எஸ்.கிருஷ்ணன்
வரலாற்றில் மிகவும் சமீபத்தில் தோன்றிய ஒரு மதம், சீக்கியம். கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த குரு நானக்கால் தோற்றுவிக்கப்பட்ட இந்த மதத்தைப் பத்து சீக்கிய குருக்கள் வளர்த்தெடுத்துள்ளனர். இந்து மதம், இஸ்லாம் என்னும் இரு பெரும் சவால்களை எதிர்கொண்டு பிரம்மாண்டமான வளர்ச்சியைப் பெற்ற மதம் சீக்கியம். புனித நூல், தனித்துவமான வழிபாட்டு முறை, சமயச் சடங்குகள், நம்பிக்கைகள், அடையாளங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் சீக்கிய மதம் இன்று உலகின் ஐந்தாவது பெரிய சமயமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. அதற்கு சீக்கியர்கள் கொடுத்த விலை மிகப் பெரியது. ஒரு பக்கம் முகலாயர்கள் சீக்கிய மதத்தை அழித்தொழிக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்தனர். இன்னொரு பக்கம், சீக்கியர்களை இந்துக்கள் என்று வகைப்படுத்தி அவர்களுடைய தனித்துவமான அடையாளங்களைத் துடைத்தொழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்தது இந்து மதம். குரு நானக்கும் அவருக்குப் பிறகு வந்த சீக்கிய குருக்களும் இந்த இரண்டு முயற்சிகளையும் ஒரே சமயத்தில் எதிர்க்கவேண்டியிருந்தது. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது சீக்கியர்கள் குறித்த தேடல் இந்தியாவில் தீவிரமடைந்தது. சீக்கியர்கள் எனப்படுபவர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் கிடையாதா? அவர்களுடைய மதக்கொள்கை என்ன? அவர்கள் தனி நாடு கோருவது உண்மையா? சீக்கிய மதம் வன்முறையில் நம்பிக்கை கொண்டதா? இப்படிப் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. எஸ். கிருஷ்ணனின் இந்தப் புத்தகம் சீக்கியர்கள் குறித்த அடிப்படை சந்தேகங்கள் அனைத்துக்கும் தெளிவாகப் பதிலளிப்பதோடு சீக்கிய மதம் குறித்த ஒரு விரிவான வரலாற்றுப் பார்வையையும் அளிக்கிறது. பஞ்சாப் குறித்த எளிமையான அறிமுகத்தோடு தொடங்கும் இந்தப் புத்தகம் சீக்கிய மதத்தின் தோற்றம், வளர்ச்சி, பிரிட்டிஷ் ஆட்சிக்காலம், பிரிவினை, பிந்தரன்வாலே என்று விரிவாகப் பல விஷயங்களைப் பேசுகிறது. வண்ணமயமான ஒரு வரலாற்றுப் பயணத்துக்கு உத்தரவாதம் இந்தப் புத்தகம்.

₹ 235.00 ₹ 235.00

Not Available For Sale

This combination does not exist.

Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days