Skip to Content

சேமிப்பு - முதலீடு தகவல் களஞ்சியம்

சேமிப்பு - முதலீடு தகவல் களஞ்சியம் - சி.சரவணன்
பணத்தைப் பெருக்குவதற்கும் சேமிப்பதற்கும் நமக்கு எழும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் என்றைக்கும் பஞ்சமே இல்லை. ஒரு சந்தேகம் தீர்ந்தால், அடுத்த சந்தேகம். அதுவும் முடிந்தால் இன்னொன்று... காரணம், ‘பணம் சேர்த்தது போதும்’ என்று நமது மனம் திருப்தியடைய மறுப்பதுதான். அதேபோல, பணத்தை நிர்வகிப்பதிலும் எல்லோருக்கும் ஏகப்பட்ட சந்தேகங்கள். பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட்... இப்படி பணம் கொழிக்கும் துறைகளில் முதலீடு செய்து பணத்தை பெருக்கவேண்டும் என்று விரும்பினாலும் அவை குறித்து பலருக்குத் தயக்கமும் இருக்கிறது. அப்படிப்பட்ட தயக்கங்களைப் போக்கும் பணியை இந்தப் புத்தகம் செய்யும். சேமிப்பு, முதலீடு, வளமான வாழ்க்கை என்ற தாரக மந்திரத்துக்கான கருவிகளைப் பற்றி அடிப்படையில் இருந்தே தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு L.K.G. (Learners Knowledge Guide) ஆக இருக்கும். அதேசமயம், ஏற்கெனவே தெரிந்து கரைகண்டவர்களுக்கு மேலும் பலமூட்டி வளமூட்டும் ஒரு தகவல் களஞ்சியமாகவும் இருக்கும். ‘நாணயம் விகடன்’ இதழோடு ‘L.K.G.’ இணைப்பாக வெளிவந்து, வாசகர்களின் மனதைக் கவர்ந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். ஒரு பெரிய திருவிழா கூட்டத்துக்குத் தங்களுடைய குழந்தையைப் பத்திரமாக விரலைப் பிடித்து அழைத்துச் செல்லும் பெற்றோர்களைப் போல, இந்த நூல், முதலீட்டு உலகத்துக்குள் உங்கள் விரலைப் பிடித்து அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தும். இதைப் படித்துவிட்டு பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். காரணம், பணத்தைப் பெருக்கும் தாரக மந்திரத்தின் பாஸ்வேர்ட் இதனுள்தான் ஒளிந்திருக்கிறது!
₹ 250.00 ₹ 250.00

Not Available For Sale

This combination does not exist.

Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days