Skip to Content

சோறு முக்கியம் பாஸ்!

சோறு முக்கியம் பாஸ்! - வெ.நீலகண்டன்
பசிக்கு உணவு என்பது எப்படி அவசியமோ அப்படி நாவுக்கு ருசி அவசியமாகிறது. சுவையான உணவு வகைகள் எங்கு கிடைக்குமோ தேடிச்சென்று அங்கு ருசி பார்ப்பவர்கள் ஏராளம் உள்ளனர். சில உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு களின் மணமும் ருசியும் நம்மை அங்கேயே அழைத்துச் சென்றுவிடும். இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு, கார்ப்பு - இந்த ஆறு சுவைகளின் சங்கமம் நம் நாவுக்கு ருசியையும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகிறது. மதுரை இட்லி, தஞ்சாவூர் சாம்பார், திண்டுக்கல் பிரியாணி, செட்டிநாட்டு மசாலா.. இப்படி தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள், ஒவ்வொரு உணவு தயாரிப்புக்குப் பெயர்பெற்றவை. அப்படி தமிழ்நாடெங்கும் உள்ள பல உணவகங்களுக்கு நேரில் சென்று அங்கு தயாரிக்கப்படும் விதவிதமான உணவுகளைப் பற்றி ஆனந்த விகடனில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. கூடவே உணவுப் பொருள்கள் பற்றிய சில சந்தேகங்களுக்கு உணவு நிபுணர்களின் விளக்கங்களும் இதில் உள்ளன. எந்த ஊரில் எந்த உணவு பிரசித்தம், அது எங்கு கிடைக்கும் என ஒவ்வொரு உணவகம் பற்றியும் இதில் கூறப்பட்டுள்ளதால், வெளியூர்களுக்குச் செல்வதையே பணியாகக் கொண்டவர்களுக்கு இந்த நூல் பேருதவியாக இருக்கும். உணவுகளை ருசிக்க உள்ளே செல்லுங்கள்.
₹ 220.00 ₹ 220.00

Not Available For Sale

This combination does not exist.