சைவ சித்தாந்தம்
சைவ
சித்தாந்தம் - நந்தலாலா பிரணவ மந்திரத்தை விளக்கும் இந்த வடிவம் மந்திரமேனிச் சக்கரம் என்று வழங்கப்படுகிறது. இதை திருமூலர் ‘சூட்சுமப் பஞ்சாட்சரம்’ என்று அழைக்கிறார். இந்த உடம்பு ‘சிவயநம’ என்ற தைலத்தால் முழுக்காட்டப்பட்டது என்கிறார். மற்றோர் இடத்தில் திருமூலர் இதை ‘சிவகாயம்’ என்றும் அழைக்கிறார். பிரணவம் என்பது பேசப்படாத மந்திரம் என்பதால், கொங்கணர் இதனை ‘ஊமை எழுத்தே உடலாச்சு’ என்கிறார். அப்பேர்ப்பட்ட பெருங்கடலாகிய சைவ சித்தாந்தத்தை மிக எளிமையாக கண்முன் காட்டுகிறார் நூலாசிரியர் நந்தலாலா. |