சைவ ஆதீனங்கள்
சைவ
ஆதீனங்கள் - ஜனனி ரமேஷ் ஆதினங்களின் தோற்றம், வளர்ச்சி, பணிகள் அனைத்தையும் எளிமையாக அறிமுகப்படுத்துகிறது. கோயில்களின் வரலாறு வெளிவந்த அளவுக்கு ஆதீனங்களின் வரலாறோ அவற்றின் தலைமைப் பொறுப்பிலுள்ள ஆதீனகர்த்தர்கள் குறித்த வரலாறோ வெளிவந்ததில்லை. இந்து சமய வரலாற்றில் சைவ ஆதீனம் வகிக்கும் பாத்திரம் என்ன? ஆதீனம் என்றால் என்ன? மொத்தமுள்ள 18 ஆதீனங்களில் இப்போது எவ்வளவு இயங்கி வருகின்றன? அவை எங்கே அமைந்துள்ளன? அவற்றை யார் பொறுப்பேற்று நடத்திவருகிறார்கள்? ஆதீனங்களில் எத்தகைய மரபுகள் பின்பற்றப்படுகின்றன? பொதுவான மரபுகளா அல்லது ஒவ்வொன்றுக்கும் தனித் தனியே நடைமுறைகள் உள்ளனவா? சைவ சித்தாந்தம் பற்றிய பார்வையில் இவர்களுக்கு இடையில் வேறுபாடுகள் நிலவுகின்றனவா? சைவத்தை இவை எவ்வாறு வளர்த்தெடுக்கின்றன? ஆதீனங்களின் தோற்றம், வளர்ச்சி, பணிகள் அனைத்தையும் விரிவாகவும் எளிமையாகவும் அறிமுகப்படுத்துகிறது இந்நூல். தமிழறிஞர்களையும் அவர்தம் படைப்புகளையும் தொடர்ந்து அறிமுகம் செய்து வரும் ஜனனி ரமேஷின் மற்றுமொரு படைப்பு. |