சாதி : எதிர் வர்க்கம்
இந்தியாவின் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான பிகாரில் பிறந்தவரான அசோக் (யாதவ்). இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை வலியுறுத்தும் சி.பி.எம்.மின் நிலைப்பாட்டை கூர்மையாக விமர்சிக்கிறார். தேர்ந்த ஆற்றலோடும் தர்க்க அறிவோடும் கிரிமிலேயரை கேள்விக்குள்ளாக்கும் அவரின் விவாதங்கள் சி.பி.எம்.மைத் தாண்டி இடஒதுக்கீடு நிலைப்பாட்டில் பார்ப்பன அளவுகோல்களை சுமந்துத் திரியும் பல்வேறு நபர்களுக்கும் சக்திகளுக்கும் பதிலாய் அமைந்துள்ளது. அருந்ததியர் இடஒதுக்கீட்டிலும் தலித்திய அரசியல் உரையாடல்களிலும் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் குறித்த அவதூறுகளையும் எதிர்த்து முக்கிய கருத்தியல் பங்காற்றி வரும் கவிஞர் மதிவண்ணன் கிரிமிலேயருக்கெதிரான இந்த ஆவணத்தை தமிழாக்கித் தந்ததோடு இப்பிரதிக்கான மிக முக்கிய முன்னுரை ஒன்றையும் வழங்கியுள்ளார். இந்திய-தமிழக சமூக நீதி வரலாற்றில் மிக முக்கிய ஆவணமான இப்பிரதி மீது உரையாடலை நிகழ்த்தும் முயற்சியாகவே தமிழ் மக்களிடம் கருப்புப் பிரதிகள் இந்நூலின் இந்த இரண்டாம் பதிப்பையும் முன் வைக்கிறது.