சாந்தோக்ய உபநிஷத்
| சாந்தோக்ய
உபநிஷத் - அ.வெ. சுகவனேச்வரன் ‘நான் யார்?’ - காலம் காலமாக எழும் கேள்விக்கு - ‘தத் த்வமஸி’ - நீ அதுவாக உள்ளாய் என்ற மகா மந்திரம் உபதேசிக்கப்-படுகிறது. இந்த மந்திரம் சாந்தோக்ய உபநிஷத்துக்கு மகா வாக்கியமாக அமைகிறது. நதிகளில் பெருகும் நீர் முடிவில் கடலில் சங்கமிக்கிறது. அப்போது அது பெயர், உருவம், தனித்தன்மை எல்லாம் இழந்து கடல் நீருடன் ஒன்றிவிடுகிறது. அதேபோல எல்லா ஜீவராசிகளும் முடிவில் தத்தம் தனித்தன்மையை இழந்து ஒரே மெய்ப்பொருளான பிரம்மத்துடன் இரண்டறக் கலந்துவிடுகின்றன. ஏகப்பட்ட எளிமையான தகவல்கள் மற்றும் குட்டிக் குட்டி கதைகள் மூலம் ஒரு சுவாரஸ்யமான அனுபவம் பெற தயாராகிவிட்டீர்களா? உள்ளே போங்கள்!
|