அடித்தளம் மேற்கட்டுமானம் குறித்து மார்க்சிய இயங்கியல்
நூல் குறிப்பு:
மார்க்சியம் என்பது ஓர் உயிர்ப்புள்ள தத்துவம். ஆனால் மார்க்சியக் கோட்பாடுகள் குறித்து ஓர் இறுகிப்போன மனநிலையே இன்னமும் மேலோங்கியிருக்கின்றது. பொருள்முதல்வாதக் கருத்துகளை உயர்த்திப் பிடிக்கும் அளவுக்கு இயங்கியல் கூறுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. இத்தகைய போக்கு நாம் வாழும் சமூகம் குறித்த ஆய்விலும், சமூக மாற்றம் குறித்த நடைமுறையிலும் பெரும் தீங்கை விளைவிக்கும். நூறு ஆண்டுகள் கடந்த பின்னரும் நமது சமூகம் குறித்த அடிப்படையான விசயங்களில் கூட நமக்கான கருத்துகளை இன்னமும் உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. இதனால்தான் நான் இயங்கியல் கூறுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றேன் அவற்றை வலியுறுத்துகின்றேன். இக்கட்டுரையில் சமூகமும் சிந்தனையும், உற்பத்தியும் மறுஉற்பத்தியும், உற்பத்தியும் உற்பத்திச் சக்தியும், அடித்தளமும் மேல்கட்டுமானமும் ஆகிய மார்க்சிய வகைப்பாடுகள் குறித்து விவாதித்திருக்கின்றேன்.
ஆசிரியர் குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் உள்ள வீமனூர் எனும் சிறிய கிராமத்தில் 1962 ஆம் ஆண்டு பிறந்த அ. நாகரத்தினம், சேலம் சவுடேஸ்வரி கல்லூரியில் பி.எஸ்.ஸி. புள்ளியியல் பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல்., எம்.எல்., பட்டம் பெற்றார். 1993 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார். 1998 ஆம் ஆண்டு ‘பொது உடைமை’ இதழை இரண்டு ஆண்டு காலம் நடத்தினார். ‘ஹெகலும் மார்க்சும்’ எனும் இவருடைய நூல் 2021 ஆண்டும் ஆண்டு வெளிவந்தது. இவருடைய மனைவி உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் (ஓய்வு) முனைவர் மு. வளர்மதி. மகள் குறிஞ்சி சட்டக் கல்லூரி மாணவி. 2021 ஆம் ஆண்டு கொரோனாவில் பாதிக்கப்பட்டு அ. நாகரத்தினம் மறைந்தார்.