அடிப்படைத் தமிழ் - 1
அடிப்படைத் தமிழ் 1 - நர்மதா நவநீதம்
நூல் குறிப்பு:
இளையத் தலைமுறையினரை வழி நடத்தும் பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மொழித்துறையில் இயங்கும் எவருக்கும் பயன்படும் எளிமையோடும் சிறப்போடும் எழுதப்பட்டுள்ள மொழியறிவு நூல் இது. தமிழை எளிதில் கைகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள மொழிப்பயிற்சி கையேடாக மாணவர்களுக்கு இந்நூல் அமையும். உலகளவில் பரவியுள்ள தமிழர்களுக்கும் மொழியின் அடிப்படை இயக்கத்தை எளிமையாகவும் ஆழமாகவும் படிப்பித்துவிட வேண்டும் என்கிற அக்கறையில் எழுதப்பட்டுள்ள இந்நூலின் வரிசையில் முதல் நூலாக இதை வெளியிட்டுள்ளது கருப்புப் பிரதிகள்.
ஆசிரியர் குறிப்பு:
சென்னையை பிறப்பிடமாகக் கொண்டவர் முனைவர் நர்மதா நவநீதம். தமிழ் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலைப் படித்த இவர், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 2005 ஆம் ஆண்டு ‘தமிழகத்தில் தேவரடியார் மரபு’ எனும் தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகவும் 2009 ஆம் ஆண்டு முதல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆராய்ச்சி அலுவலர் மற்றும் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார். தற்போது மாணவர்களுக்கு தமிழ் மற்றும் பிற பாடங்களை கற்பிக்கும் ‘யான்’ என்ற கல்வி நிறுவனத்தின் தலைமை செயல் தலைவராக பணியாற்றி வருகிறார்.