Skip to Content

அர்த்தமுள்ள அந்தரங்கம்

அர்த்தமுள்ள அந்தரங்கம் - டாக்டர் ஷாலினி
சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி மட்டும்தான் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற கோள்கள் எல்லாம் உயிர்ப்பு சக்தி அற்று மருகி நிற்க, பூமி மட்டும் உயிரினங்களைப் பிரசவித்து தாய்மைக்குரிய பூரிப்போடு தழைத்துச் செழித்திருக்கிறது. அந்த உயிரினங்களில் தனித்துவமுடையதாக, மற்ற எல்லா உயிரினங்களுக்கும் தலைமை தாங்கக்கூடிய ஆற்றலும் அறிவும் பெற்றதாக இருப்பதுதான் மனித இனத்தின் சிறப்பு. இந்த ஆற்றலையும் அறிவையும் மனிதனுக்கு அவன் நினைத்த மாத்திரத்திலேயே இயற்கை வழங்கிவிடவில்லை. டிஎன்ஏ என்ற புரதச் சுருளில் தோன்றிய உயிரின் தொடக்கம், மனிதன் என்ற உன்னத நிலை வரை பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது. அப்படிப்பட்ட உயிரைத் தாங்கி இருக்கும் உயிரினங்களின் தலையான பணியே இனப்பெருக்கம்தான். இனப்பெருக்கத்தை ஊக்குவிப்பதையே குறியாகக் கொண்டு செயல்படுபவை ஜீன்கள். அவை, உயிர்த் தேவைக்கு ஏற்றவாறு உயிரினங்களில் ஏற்படுத்திய பரிணாம மாற்றங்கள் பல. இந்தப் பரிணாமங்களுக்கும், உயிரினங்களின் வாழ்வியல் மாற்றங்களுக்கும் அடிப்படையாக ஜீன்கள் கையில் எடுத்திருக்கும் யுக்திதான் காமம்.
₹ 200.00 ₹ 200.00

Not Available For Sale

This combination does not exist.