Skip to Content

அஞ்சறைப் பெட்டி

நலம் வாழ எந்நாளும் அஞ்சறைப் பெட்டி - மருத்துவர் வி.விக்ரம்குமார்
உணவுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஒருசேர உதவிய எளிமையான, சிறிய மருந்தகமாக விளங்கிக் கொண்டிருந்தது சமையலறையின் அஞ்சறைப் பெட்டி. வீட்டிலிருக்கும் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படும் சிறுசிறு உபாதைகளை அஞ்சறைப் பெட்டி பொருள்களைக்கொண்டே போக்கிக்கொண்டிருந்தனர் சென்ற தலைமுறை வரை. `சீரகம் இல்லா வீடும், சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது’, `பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உணவருந்தலாம்’ போன்ற முதுமொழிகள், நம் பாரம்பர்ய உணவுப் பொருள்கள் சிறிய உபாதைகள் முதல் உயிரைப் பறிக்கும் புற்று போன்ற நோய்களிலிருந்து நம்மைக் காக்கும் மகத்துவம் கொண்டவை என்பதை உணர்த்துகின்றன. உதாரணமாக ‘அதிகமாக மசாலாப் பொருள்களைப் பயன்படுத்தும் இந்தியர்களைவிட, அமெரிக்கர்களுக்கு மூன்று மடங்கு பெருங்குடல் புற்றுநோய் (Colon cancer) வருவதற்கான அபாயம் உண்டு. மஞ்சள், கிராம்பு, லவங்கப்பட்டை போன்றவை பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு தருகின்றன’ என்ற இந்தத் தகவல், நம் பாரம்பர்ய உணவுப் பொருள்களின் மகத்துவத்தை உணர்த்துகிறது. மிளகு, சீரகம், இஞ்சி போன்ற இயற்கை நறுமணமூட்டிகள் உணவுக்குச் சுவையையும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் அள்ளி வழங்குபவை. இப்படிப்பட்ட பொருள்களின் வரலாற்றையும் அவற்றின் பயன்களையும் விளக்கி, அவள் விகடனில் வெளிவந்த கட்டுரைத் தொடரின் தொகுப்பு நூல் இது. அஞ்சறைப் பெட்டியின் பெருமையை அறிந்து கொள்ளுங்கள்!
₹ 220.00 ₹ 220.00

Not Available For Sale

This combination does not exist.