அன்பும் அறமும்
அன்பும்
அறமும் - சரவணன் சந்திரன் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த இக்கட்டுரைகள் வாசகர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றவை. அத்தொடரில் வெளிவராத கட்டுரைகளையும் உள்ளடக்கிய இந்தத் தொகுப்பு பல்வேறு நிறங்களை உள்ளடக்கிய மனிதர்களின் கதைகளை உரக்கப் பேசுபவை. தமிழ் நிலத்தைத் தாண்டி சர்வதேச நிலங்களில் ஊடாடும் மனிதர்கள் குறித்தும் இத்தொகுப்பில் இருக்கிற கட்டுரைகள் பேசுகின்றன. விவசாயம், வணிகம் எனப் பல்வேறு துறை சார்ந்த மனிதர்களின் விழுமியங்களை முன்னிறுத்தி புதிய புரிதல்களை வாழ்வியல் ஓட்டங்களுக்கு வழங்குகிற வகையில் முக்கியமான கட்டுரைத் தொகுப்பு இது. கட்டுரைத் தொனியில் அமையாத கதைகள் அடங்கிய தொகுப்பாக இதைப் பின்னியிருக்கிறார் சரவணன் சந்திரன். |