Skip to Content

அன்பிற்கும் உண்டு அடைக்கும் தாழ்

அன்பிற்கும் உண்டு அடைக்கும் தாழ் - டாக்டர் சிவபாலன் இளங்கோவன்
மனித உறவுகள் காலங்காலமாக தொடர்ந்து கொண்டே வருவதற்கு அடிநாதமாக இருப்பது பொறுமை, விட்டுக்கொடுத்தல் ஆகும். இரண்டு பேரின் உறவுக்கு இடையில் அவ்வப்போது சச்சரவு, தன்முனைப்பு ஏற்படுவது இயல்புதான். ஆனால் அப்போதெல்லாம் இருவரின் யாரோ ஒருவர் பொறுமை காப்பதாலும் விட்டுக்கொடுப்பதாலும் அந்த உறவு அறுந்துபோகாலம் நீள்கிறது. மாறிக்கொண்டே வரும் காலகட்டத்துக்கு ஏற்ப உடை, உணவு, நாகரிகம் எல்லாம் மாறிவருவதைப் போல மனித உறவிலும் மாற்றம் ஏற்படுகிறது. இன்றைய ஆண் - பெண் உறவு, நண்பர்களின் உறவு கணவன் மனைவி உறவு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றைப் பற்றி ஆனந்த விகடனில் வெளியான ‘அன்பிற்கும் அடைக்கும் தாழ்; தொடர் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. காதலர்களுக்குள் பிரேக் அப் என்பது சர்வ சாதாரணமாக இன்று ஏற்பட்டு வருகிறது. காரணம் ஓர் ஆணுடனான உறவு தொடரவேண்டுமா வேண்டாமா என்று இன்றைய பெண்கள் சுயமாக முடிவெடுக்கின்றனர். இது இந்தக் காலத்தில் அவர்களுக்கு அவசியமும்கூட. இன்றைய நகர்ப்புற ஆண் பெண் உறவு, பிரிவுகளை ஆழமாக அலசி உறவு நீடிக்க ஆலோசனைகளையும் சொல்கிறார் நூலாசிரியர். மனித உறவுகளிடையே ஏற்படும் பல்வேறு சிக்கல்களையும் தீர்வுகளையும் இனி அறியலாம்.
₹ 250.00 ₹ 250.00

Not Available For Sale

This combination does not exist.