அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்
அங்கிருந்துதான் வந்திருக்கிறோம் - சுகுணா திவாகர்
பெரியாரை சாராம்சமான பொது அடையாளங்களில் அடைத்துவிட முடியாது என்பதுதான் சிக்கல். பெரியார் என்றால் தீவிரம். பெரியார் என்றால் மறுப்பாளர். பெரியார் என்றால் வெகுஜன அபிப்பிராயங்களுக்கு விரோதி. பெரியார் என்பது கருந்துளையல்ல. அது ஒரு எதிர் நீரோட்டம். அந்த நீரோட்டத்தைத் தாங்குவதற்கு நம் வீடுகளைத் தயார்ப்படுத்த வேண்டும். எல்லாப் படங்களையும் போல் அது சமர்த்தாக சுவரில் தொங்கிவிட்டுப் போவதில்லை. தர்க்கங்களின் அடிப்படையில் தன் செயற்பாடுகளை முன்வைத்த பெரியாரை, தர்க்கங்களின் எல்லைகளை மீறும் கவிதைக்குள் கொண்டு வர முடியுமா? பெரியார் மொழியின் மீதும் இலக்கியங்கள் மீதும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தவர். அவரை அதே மொழி இலக்கியத்துக்குள் கொண்டு வர முடியுமா?