அழகன் முருகன்
அழகன்
முருகன் - பொன். மூர்த்தி வடபழநி ஆண்டவர் கோயிலின் ஸ்தல புராணம் இது. குன்று இருக்கும் இடங்களில் மட்டுமல்ல, 'கோலிவுட்'டில்கூட குமரன் குடியிருக்கிறான். ஐந்து நட்சத்திர ஓட்டல் அளிக்கும் ஆடம்பர உணவைக் காட்டிலும் அன்னையின் கைச்சோறு ஆத்ம சுகமளிக்குமல்லவா! அப்படியொரு சுகத்தை அள்ளி வழங்குகிறான் வடபழநி ஆண்டவன். இந்நூலும் ஒரு வகையில் திருமுருகாற்றுப்படைதான். அருள்தரும் முருகனின் வீட்டுக்கு உங்களை அழைத்துச்செல்வதால். ஆடிக் கிருத்திகையாகட்டும்... கந்த சஷ்டிப் பெருவிழா ஆகட்டும்...! இங்கு கூடும் பக்தர்களின் கூட்டம் எண்ணிலடங்கா. முகூர்த்த நாள்களில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடக்கும் கோயில் இது. இரு மனங்கள் இணையும் பிரும்மாண்ட சம்சாரக் கடல்! கோயிலின் இண்டு இடுக்கெல்லாம் சென்று பரவசப்பட்டு இந்நூலை எழுதியிருக்கிறார் நூலாசிரியர். |