Skip to Content

அழகின் ரகசியம்

அழகின் ரகசியம்
‘பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்..! வண்ணத்து பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்..!’ உண்மைதான்! ரகசியங்கள் நம் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கும்வரை அவை ஆச்சரியமான அதிசயங்கள்தான்! எப்போது அவை நம் கண்களுக்கு புலப்படுகிறதோ, அப்போது அவை அழகான அதிசயங்களாக நம்மை பிரமிக்க வைத்துவிடும். அதுவும் பிரபலமானவர்களின் ‘அழகு ரகசியங்கள்’ நமக்கு ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் தந்து, நம்மையும் அழகுபடுத்திக் கொள்ளத் தூண்டும். அப்படி நமக்கு ஏற்கெனவே அறிமுகமான சில பிரபலங்களின் அழகு ரகசியங்களை இங்கே அணிவகுத்துத் தந்திருக்கிறோம். ‘அவள் விகடன்’ இதழில் தொடர்ந்து வெளியான ‘அழகின் ரகசியம்’ கட்டுரைகளின் தொகுப்புதான் இப்போது ஒரே நூலாக உங்கள் கைகளில் பளபளக்கிறது. சினிமா, இசை, நடனம் என்று பல்வேறு துறைகளில் பிரபலமான 42 பெண்மணிகள், தங்கள் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் காரணமான விஷயங்களை மிகவும் ஆர்வத்துடன் விளக்கிச் சொல்கிறார்கள். ‘பளிச்’ என்று மின்னலைத் தோற்கடிக்கும் அழகோடு வலம் வரும் பிரபலங்களைப் பார்க்கும்போது, ‘எப்படிப்பா அவங்க ஸ்கின் மட்டும் பளபளனு மின்னுது..! அவங்க என்னதான் உபயோகிப்பாங்களோ? அது என்னனு தெரிஞ்சா நானும் வாங்கி அழகுபடுத்திப்பேனே!’ என்று பெண்களுக்கு மனதினுள் எழும் கேள்விகள், அப்படியே ஏக்கப் பெருமூச்சுகளாகத் தங்கிவிடும். அப்படிப்பட்ட பெண்களின் ஏக்கங்களை ஏற்று, எந்தவித பந்தாவும் இல்லாமல் தங்களுடைய அழகு ரகசியங்களை இங்கே பகிர்ந்திருக்கிறார்கள். முக அழகு மற்றும் சருமப் பராமரிப்பு குறித்து வாசகிகள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு மருத்துவ நிபுணர்களும் அழகுக்கலை நிபுணர்களும் அளித்த பதில்கள் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் தரப்பட்டுள்ளன. தங்கள் உடலழகைப் பாதுகாக்க விரும்பும் பெண்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம் என்பதில் சந்தேகமில்லை. வாருங்கள் அழகு அணிவகுப்பில் பங்கேற்க!
₹ 120.00 ₹ 120.00

Not Available For Sale

This combination does not exist.

Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days