Skip to Content

அல்சர்

அல்சர் : எரிச்சல் to நிம்மதி - டாக்டர் எல். ஆனந்த்
வயிறு தொடர்பான பிரச்னைகளில் அல்சரால் பாதிக்கப்படுபவர்கள்தான் அதிகம்.வயிற்றுக் கோளாறுகளுக்குக் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்படுவதால், பாதிக்கப்படுபவர்கள் அசட்டையாக இருந்து ஏமாந்துபோவதற்கு வாய்ப்புகள் அதிகம். அவசரகதியாகிவிட்ட இன்றைய உலகில், நெஞ்சு எரிச்சல் போன்ற அறிகுறிகளை நிறைய பேர் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. மலையைப் பிளந்த பிறகுதான், சிறு உளியின் வீரியம் புரியவரும். அந்த வகையில், வயிறு தொடர்பான பல கேள்விகளுக்கு விடையாக அமைந்துள்ளது இந்நூல். குறிப்பாக மருந்து, மாத்திரை இல்லாமல் அல்சரைத் தவிர்ப்பது குறித்த வழிகாட்டுதல்களுடன் இந்நூலை எழுதியிருக்கிறார் டாக்டர் எல்.ஆனந்த். 1996-ல், மதுரை மருத்துவக் கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்ற இவர், ஜீரண மண்டலம் தொடர்பான சிறப்பு மருத்துவ மேல்படிப்பை (FRCS), இங்கிலாந்தில் உள்ள 'எடின்பரோ ராயல் மருத்துவக் கல்லூரியில்படித்தவர். ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்ற நூற்றுக்கணக்கானவர்களை, சிகிச்சை அளித்துக் காப்பாற்றிய சேவைக்காக, தமிழக அரசின் பாராட்டுப் பத்திரம் பெற்றவர் டாக்டர் ஆனந்த்.

₹ 160.00 ₹ 160.00

Not Available For Sale

This combination does not exist.