Skip to Content

அக்கடா

அக்கடா - எஸ்.ராமகிருஷ்ணன்
குண்டூசி ஒன்றின் பயணத்தை விவரிக்கும் இந்த சிறார் நாவல் சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் விசித்திரங்களையும் கொண்டிருக்கிறது. வெவ்வேறு வகையான குண்டூசிகள், அவற்றின் வாழ்க்கை, அவர்களுக்குள் ஏற்படும் மோதல் எனப் புதிய கதைவெளியினை அறிமுகம் செய்கிறது இந்த நூல். குண்டுசிக்குத் தலை ஏன் பெரியதாக இருக்கிறது? அதுக்குத் தலை வலிக்காதா? என்று தனது நண்பரின் இரண்டாவது படிக்கும் மகள் தன்னிடம் கேட்டபோதுதான் இந்த நாவலுக்கான முதற்பொறி தனக்குள் விழுந்ததாக கூறுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். சிறுவர்கள் உலகைப் பார்க்கும் விதம் முற்றிலும் வேறுபட்டது. குழந்தைகள் எந்தப் பொருளையும் அதன் பயன்பாடு சார்ந்து மட்டும் யோசிப்பதில்லை. உயிரற்ற பொருட்களை என நம் ஒதுக்கி வைத்தவற்றிற்கு உயிர் கொடுக்கிறார்கள் சிறுவர்கள். பொருட்களின் விநோத உலகிற்குள் பயணம் செய்ய ஆசைப்படுகிறார்கள்.
₹ 130.00 ₹ 130.00

Not Available For Sale

This combination does not exist.