Skip to Content

ஐ லவ் யூ மிஷ்கின்

ஐ லவ் யூ மிஷ்கின் - சி. சரவணகார்த்திகேயன்
திரைப்பட விமரிசனக் கட்டுரைகளின் தொகுப்பு என்று இந்நூலை அறிமுகப்படுத்தலாமா? செய்யலாம்தான், ஆனால் சி. சரவணகார்த்திகேயனின் ரசனை, அதை அவர் வெளிப்படுத்தும் விதம் இரண்டையும் வைத்துப் பார்க்கும்போது, விமரிசனம் என்பதைத் தாண்டி தனித்த ஒரு கலைப்படைப்பாகவே இந்நூல் உயர்ந்து நிற்பதை அவதானிக்கமுடிகிறது. சினிமா என்னும் கலை வடிவத்தை உயிருக்கும் மேலாக நேசிக்கும் ஒருவரால் மட்டுமே இத்தனை ஆழம் சென்று ஒவ்வொரு படத்தின் மெய்பொருளையும் தேடியெடுக்கமுடியும். சினிமா காதலராக மட்டுமின்றி, ஒரு கவிஞனாகவும் புனைவாசிரியராகவும்கூட இருப்பதால் சிஎஸ்கேவால் ஒவ்வொரு படத்தையும் வெவ்வேறு பிரதிகளோடு, வெவ்வேறு கலை வடிங்களோடு, பல்வேறு அனுபவங்களோடு ஒருங்கிணைத்து அணுகவும் விவாதிக்கவும் முடிகிறது. சுப்ரமணியபுரம், அங்காடித்தெரு, நான் கடவுள், பசங்க, அறம், மெட்ராஸ் கஃபே, அருவி என்று கிட்டத்தட்ட பத்தாண்டுகால திரைப்படங்களை இந்நூல் விவாதிக்கிறது என்றாலும் மிஷ்கினின் படைப்புகள் அனைத்துக்கும் நடுநாயகமாக வீற்றிருக்கின்றன. சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவரையும் இந்நூல் நிச்சயம் ஈர்க்கும்.

₹ 200.00 ₹ 200.00

Not Available For Sale

This combination does not exist.

Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days