Skip to Content

ஆல் இஸ் வெல்

ஆல் இஸ் வெல் - டாக்டர் அபிலாஷா
மனதில் எழும் எண்ணங்களே மனிதரின் செயல்களை தீர்மானிக்கின்றன. வாழ்க்கைப் போராட்டத்தில் வெல்ல முதலில் மனப் போராட்டத்தில் வெல்ல வேண்டும். ‘சென்றதினி மீளாது மூடரே... நீர் எப்பொழுதும் சென்றதையே சிந்தை செய்து, கொன்றழிக்கும் குழியில் வீழ்ந்து குமையாதீர்; சென்றதனை குறித்தல் வேண்டாம்...’ என்கிற பாரதியின் வரிகளுக்குப் பின்னால் உள்ள மனோ தத்துவத்துக்கான விளக்கங்களை இந்தப் புத்தகம் சொல்கிறது. காதல், திருமணம், குடும்பம், உறவுகள் என்ற வட்டத்தில் சிறு சிறு விஷயங்களில்கூட புரிதல் இல்லா சூழ்நிலைக்குள் சிக்கி வலுவிழந்து, வாழ்விழந்து, நம்பிக்கை இழந்து, சிதைக்கப்பட்டு பலர் உயிரை மாய்த்தும் இருக்கிறார்கள். சரியான நேரத்தில் அவர்களுக்கு ஏற்ற ஆலோசனைகள் அவர்களுக்குக் கிடைக்காததுகூட ஒரு காரணம் எனலாம். இந்தக் குறையை நீக்கவே தாய்-மகள், தந்தை-மகன், மாமியார்-மருமகள், கணவன்-மனைவி, காதலன்-காதலி, நண்பர்கள் இவர்களுக்குள் வலுவான உறவு நீடிக்க, தக்க ஆலோசனைகளை அழகாய் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். சிறு குழந்தையையும் புரிந்துகொண்டு அது வளரும் பருவத்தில் அதற்கு ஏற்ற பிஞ்சு வார்த்தைகளால் உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தி வழிநடத்தும் ஆலோசனைகளை இந்தப் புத்தகம் எடுத்துரைக்கிறது. மனித வாழ்வில் ஏற்படும் எல்லாப் பிரச்னைகளையும் கையாள மனோதத்துவ விழிப்புஉணர்வு தேவை. உளவியல் ரீதியான பிரச்னைகளை எளிதில் கையாளும் விதத்தையும் நிரந்தரத் தீர்வைப் பெறவும் இந்த நூல் உதவும். அவள் விகடனில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு கொடுத்ததுபோல இந்தப் புத்தகத்தை வாசிக்கும் உங்களுக்கும் கைகொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
₹ 100.00 ₹ 100.00

Not Available For Sale

This combination does not exist.

Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days