Skip to Content

30 நாள் 30 ருசி

30 நாள் 30 ருசி - ரேவதி சண்முகம்
இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் ரசனை மிக்கவர்கள். எல்லாவற்றிலும். சமையல் என்பதை வேலையாகப் பார்க்காமல் கலையாகப் பார்க்கிற வழக்கம் இங்கேதான் உண்டு. 'இந்த ஓட்டலில் இது ஸ்பெஷல்', 'இந்த நண்பர் கொண்டுவரும் உணவில் இந்த அயிட்டம் பிரமாதம்' என்று சாப்பாட்டை வயிறோடு தொடர்புடையதாக மட்டும் கருதாமல், நாக்குக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இங்கே ஏராளம்! திருநெல்வேலி என்றால் அல்வா, மதுரை என்றால் புட்டு, திருவையாறு என்றால் அசோகா, கொல்கத்தா என்றால் ரஸகுல்லா என்று ஊர்களையே உணவுப் பொருட்களோடு தொடர்புபடுத்தி நினைவுகூர்கிற ரசனைக்காரர்கள் நாம். பெண்களும் வேலைக்குச் செல்கிற அவசர உலகத்தில் சமையல் அறைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது என்கிற கேள்வி தவிர்க்க முடியாதது. அதற்கு ரேவதி சண்முகம் சொல்கிற பதில்தான் அவரது சமையல் குறிப்புகள். மிகவும் எளிய முறையில், செலவு அதிகம் பிடிக்காத வகையில் ரேவதி சண்முகத்தின் குறிப்புகள் அமைந்திருப்பது பாராட்டத்தக்கது. இவரது முந்தைய புத்தகமான 'முப்பது நாள் முப்பது சமைய'லுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்க்கும்போது வாசகர்கள் எந்த அளவுக்கு வெரைட்டி பிரியர்களாக இருக்கிறார்.
₹ 220.00 ₹ 220.00

Not Available For Sale

This combination does not exist.